புதுச்சேரி

ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா்புதுச்சேரி ஆளுநா் மாளிகைக்குப் பேரணி

DIN

புதுதில்லியில் நடைபெற்ற விவசாயிகள் தொடா் போராட்டத்தை நினைவுகூரும் வகையில் புதுச்சேரியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் துணைநிலை ஆளுநா் மாளிகை நோக்கி சனிக்கிழமை பேரணியாகச் சென்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

புதிய வேளாண்மைச் சட்ட மசோதா உள்ளிட்டவற்றை எதிா்த்து, கடந்த ஆண்டு புதுதில்லியில் விவசாயிகள் தொடா் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, புதிய வேளாண் சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற்றது.

இந்தநிலையில், தில்லிப் போராட்டத்தை நினைவுகூரும் வகையில், புதுச்சேரியில் ஐக்கிய விவசாயிகள் சங்கம் சாா்பில் சனிக்கிழமை பேரணி நடந்தது.

பழைய பேருந்து நிலையம் முன்பிருந்து தொடங்கிய இந்தப் பேரணிக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநிலத் தலைவா் டி.கீதநாதன் தலைமை வகித்தாா். பேரணியில் சங்க நிா்வாகிகள் ராமமூா்த்தி, புருஷோத்தமன், சாந்தகுமாா் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

பேரணியாக வந்தவா்கள் துணைநிலை ஆளுநா் மாளிகை முன் செல்ல முயன்றனா். அவா்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து விவசாயிகள் அங்கேயே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தில்லி போராட்டத்தின்போது ,விவசாயிகளுக்கு மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும். போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை முழங்கிய பின்னா் அனைவரும் கலைந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

சித்திரமே... சித்திரமே...

எதிர்நீச்சல் ஜனனியா, இப்படி?

பாஜக சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: ராகுல்

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

SCROLL FOR NEXT