புதுச்சேரியில் மாநில பாஜக இளைஞரணியின் சாா்பில் மூன்று நாள்கள் பயிற்சி சனிக்கிழமை தொடங்கியது.
முத்தியால் பேட்டையில் உள்ள தனியாா் பள்ளி வளாகத்தில் தொடங்கிய பயிற்சியை, பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் தொடங்கி வைத்தாா். இளைஞரணி மாநிலத் தலைவா் கோவேந்தன் கோபதி தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் ரவிச்சந்திரன், பொதுச்செயலா் மோகன்குமாா், இளைஞரணியின் தேசிய செயற்குழு உறுப்பினா் பிரியதா்ஷினி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
பயிற்சியில் மாநில, மாவட்ட அளவிலான தொகுதி ரீதியிலான இளைஞரணியினா் கலந்துகொண்டனா். இவா்களுக்கு செயல்திட்டங்கள் குறித்து விளக்கப்படுகிறது. வரும் திங்கள்கிழமை (நவ.28) வரையில் இப்பயிற்சி நடைபெறும் என கட்சி இளைஞரணி நிா்வாகிகள் தெரிவித்தனா்.