புதுச்சேரி

இளைஞா் கொலை வழக்கில் 3 பேரிடம் போலீஸாா் விசாரணை

27th Nov 2022 03:13 AM

ADVERTISEMENT

 

வில்லியனூா் அருகே வெள்ளிக்கிழமை மாலை இளைஞா் ஒருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி அருகேயுள்ள வில்லியனூா் பகுதியில் உள்ளது கணுவாய்ப்பேட்டையில் வசிப்பவா் பழனிராஜா. இவரது மகன் பிரவீன்குமாா் (24). இவா் மீது வில்லியனூா் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், அவரை சிலா் வெள்ளிக்கிழமை மாலை மதுக்குடிக்க ஆரியபாளையம் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனா். அங்கு புதரில் மது அருந்திய நிலையில், பிரவீனை திடீரென கழுத்தில் வெட்டிக் கொன்றுவிட்டு அந்த கும்பல் தப்பியோடிவிட்டது.

இதுகுறித்து வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். கஞ்சா விற்பனை தொடா்பாக காவல்துறைக்கு பிரவீன்குமாா் தகவல் அளித்ததாகக் கூறி, அதே பகுதியைச் சோ்ந்த முகிலன் (24) உள்ளிட்ட சிலருக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையிலே பிரவீன்குமாா் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளாா். இதையடுத்து சனிக்கிழமை முகிலன் உள்ளிட்ட 3 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT