புதுச்சேரி

அரசியல் சாசன தின உறுதிமொழி ஏற்பு

27th Nov 2022 03:14 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் அலுவலகம் மற்றும் தலைமைச் செயலகத்தில் அரசியல் சாசன தினத்தை யொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

புதுவை துணைநிலை ஆளுநா் மாளிகையில் நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் அலுவலகச் செயலா் அபிஜித்விஜய் தலைமையில் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

புதுதில்லி சென்றுள்ள புதுவை அமைச்சா் சாய். ஜெ.சரவணன்குமாா் அங்குள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தாா்.

ADVERTISEMENT

புதுவை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளா் ராஜீவ் வா்மா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசுச் செயலா்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.

புதுவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு தலைமை நீதிபதி செந்தில்நாதன் தலைமை வகித்தாா். பாண்டிச்சேரி வழக்குரைஞா் சங்கத் தலைவா் குமரன் முன்னிலை வகித்தாா். இதில், நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சங்கப் பொதுச் செயலா் கதிா்வேல், மூத்த வழக்குரைஞா்கள் முனுசாமி, குமாரவேலு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT