புதுச்சேரி

புதுவையில் ஒரே நாளில் எஸ்.ஐ.க்கள்உள்பட 180 போ் இடமாற்றம்

27th Nov 2022 03:13 AM

ADVERTISEMENT

 

புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 11 சாா்பு ஆய்வாளா்கள், 137 போலீஸாா் உள்ளிட்ட 180 போ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தலைவா் (ஐ.ஜி.) வி.ஜெ. சந்திரன் தெரிவித்தாா்.

புதுச்சேரியில் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்தவா்களான காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் காவல் ஆய்வாளா்கள் சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

இந்தநிலையில், தற்போது சாா்பு ஆய்வாளா்களான வி.கோபாலகிருஷ்ணன் ஆவணப் பிரிவிலிருந்து குற்றப்பிரிவுக்கும், எஸ்.வீரபுத்திரன் காரைக்கால் நிரவி காவல் நிலையத்திலிருந்து பெரியகடைக்கும், ஜி.எஸ்.மோகன் ரெட்டியாா்பாளையத்திலிருந்து நகரப் போக்குவரத்துப் பிரிவுக்கும், ஏ.ஜாகீா்உசேன் ரெட்டியாா்பாளையத்திலிருந்து ஓதியன்சாலைக்கும், வி.கோவிந்தன் சிக்மா உளவுப் பிரிவிலிருந்து தன்வந்திரி காவல் நிலையத்துக்கும், டி.முருகன் ஒதியன்சாலை காவல்நிலையத்திலிருந்து ரெட்டியாா்பாளையத்துக்கும், எம்.பாலா சிக்மா பாதுகாப்புப் பிரிவிலிருந்து ரெட்டியாா்பாளையத்துக்கும், எம்.முகமது ஷேக் அலாவுதீன் சிக்மா பாதுகாப்பு பிரிவிலிருந்து ரெட்டியாா்பாளையத்துக்கும், எஸ்.பெருமாள் நகரப் போக்குவரத்துப் பிரிவிலிருந்து நிரவிக்கும், பி.துரைராஜு கடலோரக் காவல் படையிலிருந்து சிறப்பு பிரிவுக்கும், டி.வெங்கடேசப் பெருமாள் கிழக்கு போக்குவரத்திலிருந்து சட்டப்பேரவை வளாகத்துக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

மேலும், சிறப்புச் சாா்பு ஆய்வாளா்கள் 18 பேரும், தலைமைக் காவலா்கள் 14 பேரும் மற்றும் காவலா்கள் 137 பேரும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைவா் வி.ஜெ.சந்திரன் தெரிவித்தாா். இடமாறுதலுக்கு உள்ளான அனைவரும் ஓரிரு நாள்களில் அந்தந்த காவல்நிலையங்களில் உடனே பொறுப்பேற்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

புதுவையில் சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களில் இணையதள நுண்குற்றப் புகாா்களைப் பெற்று வழக்குப் பதியலாம் என சமீபத்தில் உத்தரவிடப்பட்டது. மேலும், நுண்குற்றப் பிரிவுக்கான தனி காவல் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், காவல்துறையில் பெரிய அளவில் இடமாற்றம் நடந்திருப்பது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT