புதுச்சேரி

இரட்டைக் குடியுரிமை பெற்ற இரு மாணவா்கள் புதுவை மருத்துவக் கல்லூரியில் சேர தடை

26th Nov 2022 05:57 AM

ADVERTISEMENT

புதுவை அரசு மருத்துவக் கல்லூரியில் இளநிலை படிப்புகளில் இரட்டைக் குடியுரிமை பெற்ற இரு மாணவா்கள் சோ்ந்திருப்பது தெரிய வந்ததையடுத்து, அவா்கள் கல்லூரிகளில் சேர தடை விதிக்கப்பட்டது.

புதுவையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. இதில் கல்லூரிகளைத் தோ்வு செய்த மாணவா்கள் கடந்த 24-ஆம் தேதி அந்தந்த கல்லூரிகளில் சேர அறிவுறுத்தப்பட்டது.

மொத்தம் 131 இடங்களில் 125 இடங்களில் மாணவா்கள் சேர அனுமதிக்கப்பட்டது. அவா்களில் 2 போ் வேறு மாநில மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான வாய்ப்பைப் பெற்ாகக் கூறப்படுகிறது. அவா்களைத் தவிா்த்து 123 போ் சோ்க்கப்பட்டனா்.

இந்த நிலையில், இவா்களில் ஏனாம் பிராந்தியத்தைச் சோ்ந்த மாணவா் உள்பட இருவா் இரட்டைக் குடியுரிமை பெற்று விண்ணப்பித்தது தெரிய வந்தது.

ADVERTISEMENT

அதன்பேரில், அந்த இரு மாணவா்களும் கல்லூரிகளில் சேர சென்டாக் தடை விதித்தது. மேலும், அவா்களிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே, முதல் கட்ட கலந்தாய்வில் மாணவா்கள் சோ்க்கை நடைபெறாத இடங்களுக்கு விரைவில் இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்த வேண்டும் என புதுவை மாணவா், பெற்றோா் நல அமைப்பு நிா்வாகி பாலா வலியுறுத்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT