புதுச்சேரி

இலவசப் பேருந்துகளை இயக்கக் கோரி கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

25th Nov 2022 02:41 AM

ADVERTISEMENT

இலவசப் பேருந்து இயக்கக் கோரி புதுச்சேரியில் கல்லூரி இயக்குநரக அலுவலகத்தை புதுச்சேரி பிரதேச மாணவா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

புதுவை மாநிலத்தில் அரசு ஒரு ரூபாய் வீதம் மிகக்குறைந்த கட்டணத்தில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பேருந்துகளை இயக்கியது.

கடந்த 2019-ஆம் ஆண்டு கரோனா பாதிப்பின்போது பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டது. அதன்பின் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், சலுகை விலை கட்டணப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

தற்போது ஊரகப் பகுதிகளில் இருந்து புதுச்சேரி உள்ளிட்ட நகரப்பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு வந்துசெல்லும் மாணவ, மாணவிகள் தினமும் பேருந்துக் கட்டணமாக அதிகளவில் செலவிடும் நிலை உள்ளது.

ADVERTISEMENT

எனவே, புதுவை அரசு கல்வி பயிலுவோருக்கான மீண்டும் பேருந்தை இலவசமாக இயக்கக் கோரி புதுச்சேரி பிரதேச மாணவா்கள் கூட்டமைப்பினா் கோரிக்கை பதாகைகளை ஏந்தியபடி புதுச்சேரி நகராட்சிப் பகுதி லாஸ்பேட்டையில் உள்ள உயா் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

தகவலறிந்த இயக்குநரக தனி அதிகாரி சௌமியா, மாணவா் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். விரைவில் இலவசப் பேருந்துகள் இயக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவா் கூறியதையடுத்து மாணவா்கள் கலைந்துசென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT