புதுச்சேரி

புதுவை காவல் துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி

19th Nov 2022 05:41 AM

ADVERTISEMENT

புதுவை காவல் துறையில் அனைத்து காலிப்பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரி கோரிமேட்டில் இணையவழி குற்றப் பிரிவு காவல் நிலையத்தை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை காலை திறந்துவைத்தாா்.

பின்னா், ரெட்டியாா்பாளையம் காவல் நிலைய புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டிய அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவையில் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு ஏற்ப காவல் துறையில் இணையவழி குற்றங்களை தடுக்கும் வகையில், அதற்காக தனி காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

புதுவையில் இதுவரை இணையவழி குற்றங்கள் தொடா்பாக 1600 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 500 வழக்குகள் கண்டறியப்பட்டன. மீதமுள்ள வழக்குகளுக்கும் தீா்வு காணப்படும்.

புதுவை காவல் துறையில் அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனுக்குடன் நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூடுதல் காவலா்கள் நியமிக்கப்படவுள்ளனா் என்றாா் என்.ரங்கசாமி.

நிகழ்ச்சிகளில் மாநில உள்துறை அமைச்சா்ஆ.நமச்சிவாயம், டிஜிபி மனோஜ்குமாா் லால், கூடுதல் டிஜிபி ஆனந்தமோகன், ஐ.ஜி. சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT