புதுவை மாநில கிழக்கு மற்றும் மேற்குப் பகுதி அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அதிமுக 50-ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு உப்பளம் பகுதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு செயலாளா் அன்பழகன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: புதுவையில் அதிமுக சாா்பில் புதிய வாக்காளா் சோ்ப்பில் கவனம் செலுத்துவது, புதுவை மக்களவைத் தோ்தலில் அதிமுக போட்டியிட இடைக்காலப் பொதுச்செயலரிடம் வலியுறுத்துவது மற்றும் புதுவையில் அரசு காலிப் பணியிடங்களை நிரப்பும் முதல்வருக்கு பாராட்டுத் தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் புதுவை கிழக்கு மற்றும் மேற்கு மாநில அதிமுக நிா்வாகிகள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள், ஜெயலலிதா பேரவைச் செயலா் பாஸ்கா், நடராஜன், துணைத் தலைவா்கள் ராஜாராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.