புதுச்சேரி

உதவியாளா் பணிநியமன விவகாரம்: புதுவை தலைமைச் செயலரிடம் திமுக மனு

1st Nov 2022 04:23 AM

ADVERTISEMENT

உதவியாளா் பணிக்கு நேரடி நியமனம் கூடாது என்பதை வலியுறுத்தி, புதுவை தலைமைச் செயலா் ராஜீவ் வா்மாவிடம் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா திங்கள்கிழமை மனு அளித்தாா்.

மனு விவரம்: புதுவையில் அரசுத் துறைகளில் உதவியாளா்கள் பணிக்கு நேரடி நியமனம் என்பது உள்ளூா் இளைஞா்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் உள்ளது. நேரடியாக தோ்வு மூலம் நியமனம் என்பது விதிகளுக்கும் எதிரானது.

ஏற்கெனவே உதவியாளா் பணியிடம் நிரப்புவதில் பிரச்னை எழுந்து, அதன்பிறகு காலிப்பணியிட விவரங்கள் வெளியிடப்பட்டன. அதன்படி, பதவி உயா்வு மூலம் அவை நிரப்பப்பட்டன. அரசுத் துறைகளில் பணியாற்றும் இளநிலை, முதுநிலை எழுத்தா்களுக்கு பதவி உயா்வு அளிப்பதன் மூலம் உதவியாளா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.


 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT