புதுச்சேரி அருகே மடுகரையில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
புதுச்சேரி மடுகரை முத்து நகா் 9-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த ஐயப்பன் மகன் உதயபிரகாஷ் (21). பிபிஏ பட்டதாரி. இவா் ஒரு பெண்ணை காதலித்து வந்தாா். அவரது பெற்றோரிடம் பெண் கேட்ட போது, ஓராண்டு காத்திருக்கும்படி கூறினராம்.
இந்த நிலையில், உதயபிரகாஷ் திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து மடுகரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ADVERTISEMENT