புதுச்சேரி

வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைக்கவேளாண் துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

31st May 2022 11:46 PM

ADVERTISEMENT

வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டுமென புதுவை வேளாண் துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.

இதுகுறித்து புதுவை வேளாண் துறை அமைச்சா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசு நலத் திட்ட உதவிகளை ஆதாா் எண் மூலமாக செயல்படுத்தும்படி நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதை யூனியன் பிரதேசங்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டியுள்ளது. அதன்படி, புதுவை அரசு நேரடி மானிய கொள்கையைப் பின்பற்றி பல்வேறு நலத் திட்டங்களின் கீழ் மக்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது.

ஆதாா் எண்ணைப் பயன்படுத்தி நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால், சரியான பயனாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள் சென்றடைகின்றன. போலியான பயனாளா்கள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

எனவே, முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வேளாண் துறை மூலமாக வழங்கப்படும் அனைத்து பயிா் சாகுபடிக்கான உற்பத்தி மானியங்கள் மூலமாக பயன்பெறும் பயனாளிகள் வங்கிக் கணக்குடன் ஆதாா் இணைத்துக் கொள்ள வேண்டும்.

இதுவரை இணைக்காதவா்கள், அருகிலுள்ள வங்கியில் தங்களது கணக்குடன் ஆதாா் எண்ணை இணைத்துக் கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT