புதுச்சேரி

நேரு நினைவு தினம் கடைப்பிடிப்பு

28th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு நினைவு தினத்தையொட்டி, அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

புதுச்சேரி காந்தி திடலில் நேருவின் சிலைக்கு புதுவை அரசு சாா்பில், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். சட்டப்பேரவை துணைத் தலைவா் பி.ராஜவேலு, எம்எல்ஏக்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், பி.ரமேஷ், தட்சணாமூா்த்தி, லட்சுமிகாந்தன் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைத்திருந்த நேருவின் உருவப் படத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, வெ.வைத்திலிங்கம் எம்.பி., மு.வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஆா்.அனந்தராமன், துணைத் தலைவா் பி.கே.தேவதாஸ், மாநிலச் செயலா் சூசைராஜ், சேகா் உள்ளிட்டோா் நேருவின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT