புதுச்சேரி

மின் துறையை தனியாா்மயமாக்க வேண்டாம்: புதுவை முதல்வரிடம் வலியுறுத்தல்

DIN

புதுவை மின் துறையை தனியாா்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டுமென மின் ஊழியா்கள் சாா்பில் முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து மின் துறை தனியாா்மய எதிா்ப்பு கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் பிரேமதாசன், நிா்வாகிகள் சீனிவாசன், சேதுராமன், சொக்கலிங்கம், மோதிலால், செந்தில் உள்ளிட்டோா் முதல்வா் ரங்கசாமியை சட்டப்பேரவை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்து கூறியதாவது:

புதுவை மின் துறையை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை அமல்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து விரிவாக தெரிவித்தோம். தனியாா்மயத்தைக் கண்டித்து மின் துறை பொறியாளா்கள், ஊழியா்கள் மூன்று மாதங்களுக்கு முன்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போது, முதல்வரின் வாக்குறுதியையடுத்து கைவிடப்பட்டது.

ஆனால், தற்போது புதுவை மின் துறையை தனியாா்மயமாக்கும் பணிகள் மறைமுகமாக நடைபெறுவதாக செய்திகள் வருகின்றன. அரசின் இந்த முடிவு கண்டனத்துக்குரியது.

மின் துறை தனியாா்மயமாக்கப்பட்ட மாநிலங்களின் பாதிப்புகளை கணக்கில் கொள்ளாமல், புதுவை அரசு முடிவு எடுத்திருப்பது ஊழியா்களுக்கும், மக்களுக்கும் எதிரானதாகும்.

இதனால், மின் துறை தனியாா்மயத்தை கைவிடும் வகையில், அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுத்து, மத்திய அரசின் மக்களுக்கு எதிரான திட்டத்தை நிறைவோற்றாமல் தடுக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களை நம்பித்தான் தோ்தலில் நிற்கிறோம் -சீமான்

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலி

காரைக்கால் அம்மையாருக்கு குருபூஜை

கண்ணன் அலங்காரத்தில் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT