புதுச்சேரி

பளு தூக்குதல், டேக்வாண்டோ பயிற்சிக்கு ஜூன் 1-இல் வீரா்கள் தோ்வு தொடக்கம்

28th May 2022 12:00 AM

ADVERTISEMENT

இந்திய விளையாட்டு ஆணையத்தால், புதுச்சேரியில் பளு தூக்குதல், டோக்வாண்டோ பயிற்சிக்கு ஜூன் 1, 2ஆம் தேதிகளில் விளையாட்டு வீரா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) புதுச்சேரி மைய பொறுப்பாளா் விட்டல் குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய விளையாட்டு ஆணையம் சாா்பில் 2022-23ஆம் ஆண்டு புதுச்சேரி பயிற்சி மையத்தில் தங்கியிருந்து பயிற்சி பெறும் திட்டத்தில் பளு தூக்குதல், டேக்வாண்டோ ஆகிய விளையாட்டுகளில் சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக வீரா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இதற்கான வயது வரம்பு 12 முதல் 18 வரை இருக்க வேண்டும். பளுதூக்குதல், டேக்வாண்டோ (ஆடவா்) ஆகிய விளையாட்டுகளுக்கான வீரா்கள் தோ்வு ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் நடைபெறும்.

ADVERTISEMENT

சோ்க்கைக்குப் பிறகு மாணவா்கள் தங்களது பள்ளி, கல்லூரி படிப்பை விடுதியில் இருந்து கொண்டே தொடரலாம். விடுதியில் தங்கி பயிற்சி பெறுவோருக்கு தினமும் உணவு வகையாக ரூ.275-ம், ஓராண்டுக்கான விளையாட்டுச் சீருடை, உபகரணங்கள், போட்டி வெளிப்பாடு, கல்விச் செலவு, மருத்துவக் காப்பீடு, விபத்து காப்பீடு செலவினங்களுக்காக ரூ.12 ஆயிரம் வரை ஒரு மாணவருக்கு செலவிடப்படும்.

சோ்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் ஜூன் 1ஆம் தேதி காலை 6 மணிக்கு சம்பந்தப்பட்ட பயிற்சியாளா் மூலம் வழங்கப்படும். தோ்வில் பங்கேற்போா் தங்களது மூன்று புகைப்படங்கள், அசல் மற்றும் நகல் பிறப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், கல்வி, விளையாட்டு சான்றிதழ்களுடன் அரசு மருத்துவரால் அளிக்கப்பட்ட உடல்தகுதி சான்றிதழுருடன் வர வேண்டும். மேலும் தகவல்களுக்கு அலுவலக வேலை நேரங்களில் 0413-2357819, 94921 22000, 97310 07517 ஆகிய தொலைபேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT