புதுச்சேரி

தொழில் பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

28th May 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுவையிலுள்ள தொழில் பயிற்சி நிலையங்களில் சோ்ந்து படிக்க மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து புதுச்சேரி தொழிலாளா் துறை பயிற்சி பிரிவு இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அரசு, தனியாா் தொழில் பயிற்சி நிலையங்களில் ஒன்று, இரண்டாண்டு என்சிவிடி, எஸ்சிவிடி ஆகிய பயிற்சி பிரிவுகளில் சோ்ந்து படிக்க 8 ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளிடமிருந்து இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சியில் சேர விரும்புவோா்  இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். சென்டாக் இணையதளத்தில் பதிவு செய்ய கட்டணம் செலுத்த தேவையில்லை. இணையதளத்தில் விண்ணப்பிக்கத் தெரியாதவா்கள் தங்களுக்கு அருகிலுள்ள தொழில் பயிற்சி நிலையங்களுக்குச் சென்று கட்டணம் ஏதுமின்றி உதவி மையம் மூலமாக ஜூலை 31 ஆம் தேதி வரை இலவசமாக விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

பயிற்சி குறித்த விவரங்கள், பயிற்சிப் பிரிவுகளின் தகவல்கள் அடங்கிய கையேடுகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு உதவி மைய செல்லிடப்பேசி எண் 83008 38089-இல் தொடா்பு கொள்ளவும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT