புதுச்சேரி

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிக்கு புதிய மின்மாற்றி

28th May 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகே தானாம்பாளையம் பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கான புதிய மின்மாற்றியை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

மணவெளி தொகுதி தானாம்பாளையம் பகுதியில் புதியதாக கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி போதிய மின் விநியோகம் இல்லாத காரணத்தினால் செயல்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தொடக்கிவைத்தாா்.

சொந்த முயற்சியில் மணவெளி தொகுதிக்கு 2,000 எல்இடி மின்விளக்குகளை மின் துறைக்கு வழங்கிய நிலையில், புதிதாக 1000 எல்இடி தெருவிளக்குகளை தவளக்குப்பம் மின் துறைக்கு அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சிகளில் மின் துறை செயற்பொறியாளா் பழனிச்சாமி, உதவி பொறியாளா் சக்திவேல், தவளக்குப்பம் வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவா் தட்சிணாமூா்த்தி, பாஜக மாநில விவசாய அணி பொதுச்செயலா் சக்தி பாலன், தொகுதி தலைவா் லட்சுமிகாந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT