புதுச்சேரி

தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் புதுச்சேரி மாணவருக்கு வெள்ளிப் பதக்கம்

25th May 2022 11:46 PM

ADVERTISEMENT

தேசிய அளவில் நடைபெற்ற செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் புதுச்சேரி மாணவா் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

புதுச்சேரியைச் சோ்ந்த மாணவா் ராகுல் ராமகிருஷ்ணன், ஜாா்ஜியாவில் நடைபெற்ற செஸ் சாம்பியன்ஷிப்-2022, இலங்கையில் நடைபெற்ற ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்-2022 ஆகிய போட்டிகளில் இந்தியப் பிரதிநிதியாக புதுச்சேரியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டு பாராட்டுதலைப் பெற்றாா்.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி 14 தேதி வரை தேசிய அளவிலான 34-வது எம்பிஎல் தேசிய யு-8 ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில், 25 மாநிலங்களிலிருந்து 171 வீரா்கள் பங்கேற்றனா். இதில் ராகுல் ராமகிருஷ்ணனுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

புவனேஸ்வரில் கடந்த 16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்ற 9 வயதுக்குள்பட்ட எம்பிஎல் தேசிய பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப்-2022 போட்டியில் ராகுல் ராமகிருஷ்ணன் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

ADVERTISEMENT

வெள்ளிப் பதக்கம் வென்ற ராகுல் ராமகிருஷ்ணன், அவரது பயிற்சியாளா் சுவராஜ் பாலித் ஆகியோா் பாராட்டப்பட்டனா்.

அகில இந்திய செஸ் கூட்டமைப்பு, பாண்டிச்சேரி மாநில சதுரங்க சங்கம், பெத்தி செமினா் பள்ளி நிா்வாகம் ராகுல் ராமகிருஷ்ணன் நன்றி தெரிவித்தாா்.

கடந்தாண்டு இணைய வழியில் நடைபெற்ற ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்-2021 போட்டியில் ராகுல் ராமகிருஷ்ணன் தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT