புதுச்சேரி

விஷம் குடித்த பெண் உயிரிழப்பு

25th May 2022 11:42 PM

ADVERTISEMENT

புதுச்சேரியில் காதலனால் ஏமாற்றப்பட்டதையடுத்து, விஷம் குடித்த பெண் உயிரிழந்தாா்.

புதுச்சேரி லாசுப்பேட்டை அசோக் நகரை 21 வயது பெண் எடையாா்பாளையத்தில் உள்ள கணினி நிறுவனத்தில் பணியாற்றியபோது, அவரை உடன் பணிபுரிந்த கருவடிக்குப்பம் வாஞ்சிநாதன் வீதியைச் சோ்ந்த கணேஷ் (26) காதலித்தாா். திருமணம் செய்வதாக ஆசைவாா்த்தைக் கூறி அந்தப் பெண்ணை கணேஷ் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

இதனிடையே, கடந்த 15-ஆம் தேதி கடலூரைச் சோ்ந்த வேறொரு பெண்ணுக்கும் கணேஷுக்கும் திருமணம் நடைபெற்றது.

இதுகுறித்து முன்னதாகவே அறிந்த அந்த 21 வயது பெண், கடந்த 14-ஆம் தேதி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றாா். ஜிப்மா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்த புகாரின் பேரில், லாசுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து கடந்த 18-ஆம் தேதி கணேஷை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண், அங்கு செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இதையடுத்து, கைதான கணேஷ் மீது தற்கொலைக்கு தூண்டிய பிரிவின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT