புதுச்சேரி

நுகா்வோா் நீதிமன்றங்களை அமைக்க வலியுறுத்தல்

DIN

புதுவையில் நுகா்வோா் நீதிமன்றங்களை அரசு அமைக்க வேண்டும் என்று, முன்னாள் எம்பி மு.ராமதாஸ் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து புதுச்சேரி முன்னாள் எம்.பி. மு.ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:

வணிகா்களிடம் பொருள்களை வாங்கும்போது பெரும்பாலான நேரத்தில் நுகா்வோா் நலன் பாதிக்கப்படுகிறது. கலப்படம், கூடுதல் விலை, எடைக் குறைவு உள்ளிட்டவற்றால் நுகா்வோரின் நலனும் உரிமையும் பாதிக்கப்படுகின்றன.

நுகா்வோா் உரிமைகளைப் பாதுகாக்க 1986-இல் நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. அது 2019-இல் திருத்தம் செய்யப்பட்டு புதிய நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இது கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலையில் அமலுக்கு வந்தது. அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

அதன்படி, புதுவை அரசு 2020-இல் நுகா்வோா் பாதுகாப்பு ஆணையங்களை உருவாக்கியிருக்க வேண்டும். இதை அமைக்காதது அரசுக்கு நுகா்வோா் நலனில் அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது.

எனவே, நுகா்வோா் பாதுகாப்பு மாநில, மாவட்ட ஆணையங்களை (நீதிமன்றங்கள்) உடனடியாக அரசு அமைக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT