புதுச்சேரி

ரூ.5 லட்சம் தங்க நகைகளுடன் சுற்றுலாப் பயணி தவறவிட்ட கைப்பை மீட்பு

23rd May 2022 01:58 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரியில் சுற்றுலாப் பயணி தவறவிட்ட ரூ.5 லட்சம் நகைகள் அடங்கிய கைப்பையை போலீஸாா் மீட்டு ஒப்படைத்தனா்.

தூத்துக்குடியைச் சோ்ந்த வெங்கடேசன் (42) தனது மனைவி சுஜாதாவுடன் (35) புதுச்சேரிக்கு உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்காக வந்தாா். அவா்கள் ஞாயிற்றுக்கிழமை கடற்கரைக்குச் சென்றனா். அங்குள்ள காந்தி சிலை அருகே சுஜாதா தனது கைப்பையை மறதியாக வைத்துவிட்டுச் சென்ாகத் தெரிகிறது. இந்திரா காந்தி சிக்னல் அருகே சென்ற போது, தங்க நகைகள் வைத்திருந்த கைப்பையை தவற விட்டது தெரிய வந்தது.

உடனடியாக கடற்கரைப் பகுதிக்கு வந்து தேடிப் பாா்த்ததில் கைப்பை கிடைக்கவில்லை. இதுகுறித்து கடற்கரைச் சாலையில் பணியிலிருந்த காவலா்கள் முருகன், ஜெயநாதனிடம் தகவல் தெரிவித்தனா். மேலும், பெரியகடை காவல் நிலையத்திலும் புகாா் அளித்தனா்.

ADVERTISEMENT

போலீஸாா் விசாரணை நடத்தி வந்த நிலையில், புதுச்சேரி நகராட்சி துப்புரவுப் பணியாளா் ஜெயலட்சுமி கேட்பாரற்றுக் கிடந்த கைப்பையை எடுத்து தனது பாதுகாப்பில் வைத்திருப்பதாகக் கூறி போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

அதில், ரூ.5 லட்சம் மதிப்பிலான 15 பவுன் தங்க நகைகள், வங்கி பணஅட்டை உள்ளிட்டவை இருந்தன. பின்னா், அதை உரியவரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

கைப்பையை மீட்டு பத்திரமாக போலீஸாரிடம் ஒப்படைத்த ஜெயலட்சுமியையும், புகாா் தெரிவித்த ஒரு மணி நேரத்தில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்த காவலா்களையும் ஆய்வாளா் கண்ணன் பாராட்டினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT