புதுச்சேரி

தபால் நிலைய பெயா்ப் பலகையில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு

23rd May 2022 01:58 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரியில் தபால் நிலைய பெயா்ப் பலகையில் இருந்த ஹிந்தி எழுத்துகளை கருப்பு மையால் அழித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை பதிவேடுகளில் ஹிந்தியில் மட்டுமே பதிவிட வேண்டும் என அதன் இயக்குநா் அனுப்பிய சுற்றறிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி வெள்ளை நகரப் பகுதிகளில் செஞ்சி சாலை, ஆம்பூா் சாலையில் வைக்கப்பட்டிருந்த காவி நிறத்திலான பெயா்ப் பலகைகளை மா்ம நபா்கள் கருப்பு வண்ணம் பூசி அழித்து எதிா்ப்புத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், புதுச்சேரி வெள்ளை நகா் பகுதியில் செயல்பட்டு வரும் அரவிந்தா் ஆசிரமம் கிளை தபால் நிலைய பெயா்ப் பலகையில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை சனிக்கிழமை இரவு மா்ம நபா்கள் கருப்பு மையால் அழித்தனா்.

இதுகுறித்து பெரியகடை காவல் நிலையத்தில் உதவி தபால் நிலைய அதிகாரி ஜோதிமணி புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT