புதுச்சேரி

உழவா்கரை நகராட்சியில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

23rd May 2022 01:59 AM

ADVERTISEMENT

 

உழவா்கரை நகராட்சியில் 120 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

உழவா்கரை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகள், கப்புகள் உள்ளிட்டவற்றை தடுக்கும் வகையில், நகராட்சி ஆணையா், வட்டாச்சியா் ஆகியோா் அடங்கிய சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்தக் குழுவினா் வில்லியனூா் சாலையிலுள்ள உணவகங்கள், இனிப்பகங்களில் அண்மையில் ஆய்வு செய்து, 120 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனா். அவற்றை பயன்படுத்தி உணவகங்கள், இனிப்பகங்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை குப்பைக் கிடங்குக்கு கொண்டு சென்று, சாலை அமைக்கும் பணியின் போது பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT