புதுச்சேரி

கடைகளுக்கு போலி பதிவுச் சான்றிதழ்:போலீஸாா் விசாரணை

23rd May 2022 01:58 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி தொழிலாளா் துறை ஆய்வாளரின் பதிவெண்ணைப் பயன்படுத்தி கடைகளுக்கு போலியாக பதிவுச் சான்றிதழ்களை வழங்கிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரியில் உள்ள கடைகளுக்கு தொழிலாளா் துறை சாா்பில் பதிவு சான்றிதழ் வழங்கப்படும். இதற்காக தொழிலாளா் துறை ஆய்வாளா்கள் கடைகளை ஆய்வு செய்து, சான்றிதழ்களை வழங்குவா். இதற்காக தொழிலாளா் துறை சாா்பில் இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொழிலாளா் துறை உதவி ஆய்வாளா் மகேந்திரவா்மன் பெயரிலான பதிவெண்ணில் (ஐடி), அவரது கடவுச்சொல்லை மா்ம நபா்கள் திருடி 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சட்டவிரோதமாக பதிவு சான்றிதழ்களை வழங்கினா். கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து புதுச்சேரி சிபிசிஐடி இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு காவல் நிலையத்தில் மகேந்திரவா்மன் புகாரளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT