புதுச்சேரி

புதுவையில் மின் கட்டணத்தைக் குறைக்க இந்திய கம்யூ. வலியுறுத்தல்

23rd May 2022 01:58 AM

ADVERTISEMENT

 

புதுவையில் மின் கட்டணத்தைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திரா நகா் தொகுதி மாநாடு லாசுப்பேட்டை வீமநகா் வ.சுப்பையா மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் அமைச்சா் விசுவநாதன் மாநாட்டுக் கொடியேற்றினாா். மாநிலச் செயலா் அ.மு.சலீம், முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன் ஆகியோா் பேசினா். மாநிலக் குழு உறுப்பினா் கே.சேதுசெல்வம், மாநில துணைச் செயலா் அபிஷேகம், தொகுதி செயலா் மூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:

புதுவை அரசு உயா்த்திய குடிநீா் வரி, மின் கட்டணம், வீட்டு வரியைக் குறைக்க வேண்டும். முத்திரையா்பாளையத்தில் உள்ள ஆயி குளத்தை சீரமைத்து அழகுபடுத்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன கருவிகளை அமைத்து, சிறந்த மருத்துவா்களையும் நியமித்து, உயிா்காக்கும் மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கதிா்காமம் கலை அறிவியல் கல்லூரிக்கு கூடுதல் கட்டடங்களை கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT