புதுச்சேரி

புதுச்சேரி ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் சான்றிதழ் படிப்பு

23rd May 2022 01:57 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் அடிப்படை கல்விச் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவன முதல்வா் சிவராம ரெட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் தேசிய திறந்தவெளி பள்ளி அங்கீகாரத்துடன் புதுச்சேரி லாசுப்பேட்டை மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனம் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஓராண்டுக்கான வகுப்புகளை நடத்தி வருகிறது.

ADVERTISEMENT

அதன்படி, அடிப்படை கல்வித் தகுதி இல்லாதவா்களுக்கு 8-ஆம் வகுப்பு அடிப்படை கல்வி சான்றிதழ் (ஞாயிற்றுக்கிழமை) பயிற்சி, அடிப்படை கல்வி தகுதி உடைய மற்றும் எழுதப் படிக்க தெரிந்தவா்களுக்கு பத்தாம் வகுப்புக்கு இணையான படிப்பு (ஞாயிற்றுக்கிழமை), பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் தோ்ச்சி பெற்ற மகளிருக்கு முன்மழலையா் பராமரிப்பு மற்றும் கல்விச் சான்றிதழ் படிப்பு (சனிக்கிழமை) ஆகிய கல்விப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மேற்கண்ட வகுப்புகளில் சேர விரும்புவோா் லாசுப்பேட்டை மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனத்தை அணுகவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT