புதுச்சேரி

மாணவா்களுக்கு சிறுதானிய உணவு:புதுவை அமைச்சா் தகவல்

23rd May 2022 01:57 AM

ADVERTISEMENT

 

புதுவையில் பள்ளி மாணவா்களுக்கு சிறுதானிய உணவு வழங்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யோகாசன பயிற்சி முகாமில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

மக்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்க வேண்டும் என்ற நோக்குடன், நிகழாண்டை சிறுதானியங்கள் ஆண்டாக பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா். எனவே, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறுதானியங்களை உணவாக கொடுக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

ஆரோக்கியமான இந்தியாவையும், ஆரோக்கியமான புதுச்சேரியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். இதுபோன்ற சூழலில் யோகாசனம் அவசியமான ஒன்றாகும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT