புதுச்சேரி

தமிழிசை கையில் பாம்பு: வைரலாகும் விடியோ

21st May 2022 12:56 PM

ADVERTISEMENT


புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறுவர்களுடன் ரயில் பயணம் செய்து, மயில்களையும், பாம்புகளையும், பறவைகளையும் கைகளில் தூக்கி வைத்து கொஞ்சிய விடியோ வைரலாகி வருகிறது.

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவ்வப்போது பல்வேறு துறைகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் புதுச்சேரியில் உள்ள தாவரவியல் பூங்காவிற்கு சென்று ஆய்வு மேற்கொண்ட அவர், அப்போது அங்கு இருந்த சிறுவர்கள் ரயிலில் குழந்தைகளுடன் அமர்ந்து கொண்டு பயணித்தார்.

மேலும் ரயிலில் பயணம் செய்த குழந்தைகளை மடியில் தூக்கி வைத்துகொண்டு கொஞ்சியபடி அவர் ரயில் பயணம் செய்தார். இது அங்கு வந்த பொதுமக்களை பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதேபோல் புதுச்சேரி வனத் துறைக்குச் சென்ற அவர் அங்கு ஆய்வு மேற்கொண்டு அங்கு பாதுகாக்கப்பட்டு வரும் மயில்களையும், பாம்புகளையும், பறவைகளையும் தனது கைகளில் எடுத்து அதனுடன் கொஞ்சி விளையாடியது வியப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT