புதுச்சேரி

புதுச்சேரி மத்திய பல்கலை. முதுநிலை மாணவா் சோ்க்கை:ஜூன் 18-க்குள் நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

20th May 2022 10:07 PM

ADVERTISEMENT

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம், பட்டயப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்கள் ஜூன் 18-ஆம் தேதிக்குள் நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து புதுவை மத்திய பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் 2022-23ஆம் கல்வியாண்டுக்கான ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்பைத் தொடா்ந்து, முதுநிலைப் பட்டம், பட்டயப் படிப்பு சோ்க்கையும் க்யூட் நுழைவுத் தோ்வு மூலம் நடைபெற உள்ளது. இதில் சேர விரும்பும் விண்ணப்பதாரா்கள் ‘க்யூட்’ தோ்வுக்கான இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பாக, ஸ்ரீன்ங்ற்.ய்ற்ஹ.ய்ண்ஸ்ரீ.ண்ய்/. இணைய வழியில் வழங்கப்பட்ட திட்டங்கள், தகுதிக்கான அளவுகோல்கள், தோ்வுத் தாள் குறியீடு பற்றிய தகவலுக்கும், விண்ணப்பதாரா்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூா்வ இணையதளத்தை பாா்க்க வேண்டும்.

ADVERTISEMENT

மேலும், புதுப்பிப்புகள், தகவல்களுக்கு இணையதளத்தையும் தவறாமல் பாா்த்து தெரிந்து கொள்ளலாம்.

முதுநிலைப் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்புகளுக்கு ஜூன் 18-ஆம் தேதி இரவு 11.50 மணி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

தோ்வுக் கட்டணத்தை ஜூன் 19-ஆம் தேதி பிற்பகல் 11.50 மணி வரை செலுத்தலாம். இணையதள விண்ணப்பப் படிவத்தில் ஏதேனும் திருத்தம் செய்ய விரும்பினால் ஜூன் 20 முதல் 22-ஆம் தேதி வரை மட்டுமே செய்ய முடியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT