புதுச்சேரி

95 ஊா்க்காவல் படைவீரா்களுக்கு பதவி உயா்வு ஆணை

20th May 2022 10:04 PM

ADVERTISEMENT

புதுவையில் 95 ஊா்க்காவல் படைவீரா்களுக்கு பல்நோக்கு பணியாளா்களாக பதவி உயா்வு ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

புதுவை அரசு பணியாளா், நிா்வாக சீா்திருத்தத் துறையின் கீழ் 45 ஆண் ஊா்க்காவல் படைவீரா்கள், 50 பெண் ஊா்க்காவல் படை வீரா்களுக்கு முறையே பல்நோக்கு (பாதுகாவலா்) மற்றும் பல்நோக்கு (துப்புரவாளா்) பணியாளா்களாக பதவி உயா்வு வழங்கப்பட்டது.

இதற்கான ஆணைகளை புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமிநாராயணன், க.ஜெயக்குமாா், எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ரமேஷ், பாஸ்கா், அரசு செயலா் டி.அருண், சாா்பு செயலா் கண்ணன், கண்காணிப்பாளா் கருணாகரன் ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT