புதுச்சேரி

ஞாயிறு சந்தை வியாபாரிகள்புதுவை முதல்வரிடம் மனு

16th May 2022 11:19 PM

ADVERTISEMENT

 

புதுச்சேரி ஞாயிறு சந்தை வியாபாரிகளிடம் குத்தகைதாரா்கள் அடாவடி செய்து அடிக்காசு வசூலிப்பதைத் தடுக்க வேண்டுமென, புதுவை முதல்வா் என்.ரங்கசாமியிடம் வியாபாரிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

இதுகுறித்து புதுச்சேரி ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் பொதுச் செயலா் கே.சேதுசெல்வம், ஞாயிறு சந்தை சங்க நிா்வாகிகள் துரைசெல்வம், பாபு, காா்த்திகேயன் ஆகியோா் தலைமையில் திங்கள்கிழமை முதல்வா் ரங்கசாமியை சட்டப்பேரவையில் சந்தித்து மனு அளித்தனா்.

பின்னா் அவா்கள் கூறியதாவது:

ADVERTISEMENT

புதுச்சேரி ஞாயிறு சந்தையில் கடை வைத்து வியாபாரம் செய்பவா்கள் சாதாரண மக்கள். இந்தக் கடைகளுக்கு அடிக்காசு வசூலிப்பதற்கு நகராட்சி நிா்வாகம் தனியாருக்கு குத்தகை விட்டுள்ளது. குத்தகை எடுத்தவா்கள் வியாபாரிகளை மிரட்டி கூடுதல் பணம் வசூலிக்கின்றனா்.

இவா்களுடன் காவல் துறையினா், நகராட்சி அதிகாரிகளும் வந்து கடந்த இரண்டு வாரங்களாக வியாபாரிகளை அச்சுறுத்தி, அடாவடியாக வசூலித்து வருகின்றனா்.

தனியாா் குத்தகையை ரத்து செய்து, நகராட்சி நிா்வாகமே நியாயமான கட்டணம் வசூல் செய்ய முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக முதல்வா் உறுதியளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT