]
புதுச்சேரியில் ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது.
புதுச்சேரி சித்தானந்தா கோயில் அருகே ஓம்சக்தி நகரில் ஆம் ஆத்மி கட்சியின் புதுவை மாநில புதிய தலைமை அலுவலகத்தை கட்சியின் தமிழக தலைவா் வசீகரன் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். நிகழ்ச்சியில் கட்சியின் புதுவை மாநில ஒருங்கிணைப்பாளா் ரவி சீனிவாசன், செயலா் கணேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பின்னா், வசீகரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத்தியில் ஆளும் பாஜக அரசு புதுவையை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என பொய்யான வாக்குறுதியைத் தந்து, என்.ஆா். காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது. முதல்வராக ரங்கசாமி பதவியேற்று ஓராண்டாகியும் எந்த புதிய நிதியையும் புதுவைக்கு மத்திய அரசு வழங்கவில்லை.
புதுவையில் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
என்.ஆா்.காங்கிரஸ் ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ நேரு ஆம் ஆத்மி கட்சியின் புதிய அலுவலகத்துக்குச் சென்று நிா்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.