புதுச்சேரி

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் தங்கத் தேர் இழுத்து அதிமுகவினர் வழிபாடு

12th May 2022 12:03 PM

ADVERTISEMENT

புதுச்சேரி: புதுச்சேரியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, வியாழக்கிழமை அதிமுக சார்பில் தங்க தேர் இழுத்து வழிபட்டனர்.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமியின் 68-வது பிறந்தநாள்  அதிமுக சார்பில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. 

புதுச்சேரி அதிமுக சார்பில், கிழக்கு மாநில செயலாளர் ஆ. அன்பழகன் தலைமையில், பிரசித்தி பெற்ற புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் தங்கத் தேர் இழுத்தும், சிறப்பு வழிபாடுகள் நடத்தியும், அதிமுகவினர் அன்னதானம் வழங்கியும் வழிபட்டனர்.

இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ்கர், ராஜரத்தினம், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், அவைத்தலைவர் அன்பானந்தம், மாநில துணைத் தலைவர் அன்பழகன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT