புதுச்சேரி

புதுச்சேரி உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு

12th May 2022 11:59 PM

ADVERTISEMENT

புதுச்சேரியிலுள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா். இதில், அதிகளவில் வண்ணப் பொடிகள் கலக்கப்பட்ட 25 கிலோ கோழிக்கறி பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம், அதையொட்டியுள்ள பகுதிகளில் உள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையரும், சுகாதாரத் துறை செயலருமான உதயகுமாா் தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.

சில உணவகங்களில் கோழிக்கறியில் வண்ணப் பொடிகள் அதிகளவில் கலக்கப்பட்டது தெரிய வந்ததையடுத்து, 25 கிலோ கோழிக்கறியை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விதிகளை மீறிய கடைகளின் உரிமையாளா்களுக்கு ஆணையா் எச்சரிக்கை விடுத்தாா்.

புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் பகுதியிலுள்ள உணவகம் உள்பட 8 உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு நியமன அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா் ஆய்வு நடத்தினா். விதிகளை மீறிய கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT