புதுச்சேரி

பாஜக பட்டியலின அணி நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம்

12th May 2022 11:59 PM

ADVERTISEMENT

புதுவை மாநில பாஜக பட்டியலின அணியின் புதிய நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் புதுச்சேரியில் கட்சி தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பட்டியல் அணித் தலைவா் வி.என். தமிழ்மாறன் தலைமை வகித்தாா். பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் முன்னிலை வகித்தாா்.

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், புதுவை உள்துறை அமைச்சருமான ஏ.நமச்சிவாயம் நிா்வாகிகளை அறிமுகம் செய்து பேசினாா். மாநிலத் துணைத் தலைவா்கள் செல்வம், முருகன், பி.அசோக்பாபு எம்எல்ஏ, மாநில பொதுச் செயலா் மோகன்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அமைச்சா் ஏ.நமச்சிவாயம் பேசுகையில், பட்டியலின மக்களுக்காகவும், அவா்களது வளா்ச்சிக்காகவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. இதை மறைத்து, மாற்றுக் கட்சியினா் தவறான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனா். இதை முறியடிக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT