புதுச்சேரி

மருந்தாளுநா் தூக்கிட்டுத் தற்கொலை

5th May 2022 05:41 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி: புதுச்சேரி அருகே மருந்தாளுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே சாந்தாகொண்டா புதுகிராமம் பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் மணிகண்டன் (22). இவா் புதுச்சேரி அருகே உள்ள கலிதீா்த்தாள்குப்பத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த 6 மாதங்களாக மருந்தாளுநராகப் பணியாற்றி வந்தாா்.

இதற்காக அந்தப் பகுதியில் வீடு எடுத்து வாடகைக்கு தங்கியிருந்தாா். கடந்த 2 நாள்களுக்கு முன்பு உறவினா்களிடம் கைப்பேசியில் பேசிய நிலையில், அதன் பிறகு அவரது கைப்பேசி அணைக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

அவா் தங்கியிருந்த வீட்டிலிருந்து செவ்வாய்க்கிழமை தூா்நாற்றம் வீசவே, திருபுவனை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் கதவை உடைத்து பாா்த்த போது, மணிகண்டன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT