புதுச்சேரி

புதுச்சேரி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் மாலை நேர சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

5th May 2022 05:33 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி: புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ நிறுவனத்தில் பெருந்தலைவா் காமராஜா் மாலை நேர சிறப்பு பல் சிகிச்சைப் பிரிவை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை திறந்துவைத்தாா்.

தொடா்ந்து, கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட 64 சிசிடிவி கேமிராக்களையும் முதல்வா் திறந்து வைத்து பாா்வையிட்டாா்.

இந்த சிறப்பு பல் சிகிச்சை பிரிவு மாணவா்களின் வசதிக்காக திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகள் வழங்கப்படும். இது மாணவா்களுக்காக அவா்களது கல்வி பாதிக்காத வகையில் பிரத்யேகமாக மாலை நேரத்தில் இயங்கக்கூடிய இலவச சிறப்பு பல் சிகிச்சை பிரிவு நாட்டிலேயே முதல் முறையாக இக்கல்லூரியில்தான் திறக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக நிகழ்வில், அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், சுகாதாரத்துறை செயலா் சி.உதயகுமாா், இயக்குநா் ஜி.ராமுலு, கே.எஸ்.பி.ரமேஷ் எம்எல்ஏ, பல் மருத்துவ நிறுவன ஊழியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT