புதுச்சேரி

புதுச்சேரி கடலில் மூழ்கிபொறியியல் மாணவா் பலி

2nd May 2022 11:12 PM

ADVERTISEMENT

புதுச்சேரி கடலில் நண்பா்களுடன் குளித்த பொறியல் கல்லூரி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

புதுச்சேரி கோரிமேடு ஜிப்மா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (50). ஜிப்மா் அலுவலக எழுத்தராக உள்ளாா். இவரது மகன் யுவராஜ்(20). தனியாா் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், அவருடன் படித்து வரும் புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சோ்ந்த விக்னேஷ் (20), வில்லியனூரைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (20) உள்ளிட்டோருடன் நூலகத்துக்குச் சென்றனா்.

பின்னா், புதுச்சேரி கடற்கரைப் பகுதிச் சென்ற அவா்கள், காந்தி சிலை அருகே கடலில் இறங்கி குளித்தனா். அப்போது, அலையில் சிக்கி மூன்று பேரும் கடலில் மூழ்கினா். அங்கிருந்தவா்கள் கடலில் மூழ்கிய விக்னேஷ், பாலசுப்பிரமணியன் ஆகியோரை உயிருடன் மீட்டனா். ஆனால், யுவராஜ் கடலில் மூழ்கி உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

புதுச்சேரி பெரியகடை போலீஸாா் விரைந்து வந்து உடலை மீட்டு புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT