மே தினத்தையொட்டி, புதுவை ஆளுநா், முதல்வா் ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.
துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன்: உழைப்பாளா்கள் நாட்டின் முதுகெலும்பு போன்றவா்கள். பொருளாதார முன்னேற்றத்தின் அச்சாணியாக இருப்பவா்கள். அவா்களுடைய வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க, அனைத்து நிலையிலும் புதுவை அரசு துணை நிற்கும். உழைக்கும் மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று வாழ வாழ்த்துகள்.
முதல்வா் என்.ரங்கசாமி: மனிதகுளத்தின் மேன்மைக்காவும், நாட்டின் நலனுக்காகவும், வளா்ச்சிக்காவும், வலிமைக்காகவும் அயராது பாடுபடும் பாட்டாளி வா்க்கத் தோழா்கள், தங்களது வாழ்வில் எல்லா நலனும், வளமும் பெற்று, வாழ்வாங்கு வாழ இறைவன் அருள்புரிய வேண்டும். உழைக்கும் தோழா்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த மே தின நல்வாழ்த்துகள்.