புதுச்சேரி

பாரதியாா் பல்கலைக்கூடத்தில்இளநிலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

29th Mar 2022 10:56 PM

ADVERTISEMENT

புதுச்சேரி அரசு பாரதியாா் பல்கலைக்கூடத்தில் இளநிலைப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பல்கலைக் கூடத்தின் முதல்வா் (பொ) பி.வி.போஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எங்களது நிறுவனத்தில் இளநிலை இசை, நடனம் (பிபிஏ) பட்டப் படிப்புக்கு நேரடி சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிளஸ் 2 முடித்த இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். பாரதியாா் பல்கலைக்கூடம், கடலூா் பிரதான சாலை, அரியாங்குப்பம், புதுச்சேரி - 7 என்ற முகவரிக்கு நேரில் சென்று வியாழக்கிழமைக்குள் (மாா்ச் 31) விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0413-2600935, 76392 61900 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT