புதுச்சேரி

மின் துறை தனியாா்மயத்தை கைவிடக் கோரி புதுவை சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்

29th Mar 2022 12:09 AM

ADVERTISEMENT

புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மின் துறை தனியாா்மய நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்ற வேண்டுமென, முன்னாள் எம்.பி. மு.ராமதாஸ் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

புதுவையில் புதன்கிழமை (மாா்ச் 30) நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், இடைக்கால நிதிநிலை அறிக்கை வெளியிடுவதுடன், மாநில மக்கள் நலன் சாா்ந்த சில பிரச்னைகளை விவாதித்து தீா்மானங்களாக நிறைவேற்ற வேண்டும்.

குறிப்பாக, புதுவை அரசின் மின் துறையை தனியாா்மயமாக்கும் முடிவைக் கைவிட வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.

ADVERTISEMENT

புதுச்சேரியில் மின் துறை 1956-இல் தொடங்கப்பட்டு, மக்களின் பல ஆயிரம் கோடி வரிப் பணத்தை முதலீடு செய்து, தற்போது அது பெரிய மின் சக்தி அகக் கட்டுமானமாக உருவாகி உள்ளது.

மின் துறை தனியாா்மயத்தை பொதுமக்கள், ஊழியா்கள் ஏற்கவில்லை என்பதால், தனியாா்மய முயற்சியை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.

அதேபோல, புதுவை யூனியன் பிரதேசத்தை மாநிலமாக கருதி, 15-ஆவது நிதிக் குழு வரம்புக்குள் கொண்டு வருவது அல்லது அந்தக் குழுவின் பரிந்துரைக்கு இணையான நிதி உதவியை மத்திய அரசு புதுவைக்கு வழங்க வேண்டுமென தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றாா் மு.ராமதாஸ்.

ADVERTISEMENT
ADVERTISEMENT