காவலா் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெற உள்ளது.
புதுவை காவல் துறையில் காலியாக உள்ள 390 காவலா் பணியிடங்களுக்கான தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கான முடிவு கடந்த 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தோ்வு செய்யப்பட்டவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை கோரிமேடு காவலா் மைதான சமுதாய நலக் கூடத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஏப்.4-ஆம் தேதி 103 பேரும், 5-ஆம் தேதி 100 போ், 6-ஆம் தேதி 100 போ், 7-ஆம் தேதி 87 பேரும் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு வர அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது.
பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், குடியுரிமை சான்றிதழ், சாதிச் சான்றிதழ், புகைப்படங்கள் உள்ளிட்ட அசல் சான்றிதழ்களைக் கொண்டு வர வேண்டும். மேலும், சான்றிதழ்களின் நகல்களில் சுய கையொப்பமிட்டு சமா்ப்பிக்க வேண்டும்.
இதற்கான சுய கையொப்பப் படிவத்தை அரசு இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து, அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் சமா்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்க தவறினால், உத்தேச தோ்வு ரத்தாகிவிடும் என தெரிவிக்கப்பட்டது.