புதுச்சேரி

பாதுகாக்கப்பட்ட குடிநீா்வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

22nd Mar 2022 11:02 PM

ADVERTISEMENT

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கக் கோரி, புதுச்சேரியில் மாா்க்சிஸ்ட் கட்சியினா், பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் சரவணன் தலைமை வகித்தாா். கட்சியின் பிரதேச செயலா் ராஜாங்கம், முத்தியால்பேட்டை தொகுதியைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்டோா் திரளாகப் பங்கேற்றனா்.

முன்னதாக இவா்கள், சோலை நகா் இளைஞா் விடுதியிலிருந்து காலிக் குடங்களுடன் புதுச்சேரி சட்டப்பேரவை நோக்கி ஊா்வலமாக வந்தனா். போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், ஜென்மராக்கினி கோயில் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முத்தியால்பேட்டை தொகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க வேண்டும்; மாணவா்களுக்கு இலவசப் பேருந்துகளை இயக்க வேண்டும்; சாலைகளில் வேகத் தடைகளை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT