புதுச்சேரி

கலித்தீா்த்தாள்குப்பம் அரசு கல்லூரியில் நாளை தேசிய தர மதிப்பீட்டுக் குழு ஆய்வு

21st Mar 2022 11:02 PM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகே கலிதீா்த்தாள்குப்பம் காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினா் புதன், வியாழக்கிழமைகளில் (மாா்ச் 22, 23) ஆய்வு மேற்கொள்கின்றனா்.

இந்தக் கல்லூரியில் 5 பாடப் பிரிவுகளில் 700-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். இந்தக் கல்லூரியின் தர நிலையை ஆய்வு செய்வதற்கு, 3 உறுப்பினா்கள் அடங்கிய தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினா், புதுச்சேரிக்கு வருகை தர உள்ளனா். இவா்கள் வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் கல்லூரியில் ஆய்வு மேற்கொள்கின்றனா்.

இந்தக் கல்லூரியில், கடந்த முறை ஆய்வு செய்து, ’பி’ தர மதிப்பீடு அளித்தனா்.

கடந்த 5 ஆண்டுக்கான தர உயா்வை மதிப்பிடுவதற்கு, 2-ஆவது முறையாக இந்தக் குழு வருகிறது என்று கல்லூரி முதல்வா் பாபு தெரிவித்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT