புதுச்சேரி

புதுச்சேரி, கடலூா் துறைமுகங்களில்புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

21st Mar 2022 02:01 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி, கடலூா் துறைமுகங்களில் ஞாயிற்றுக்கிழமை முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஞாயிற்றுக்கிழமை காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென் கிழக்கு வங்கக் கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டது. இது ‘ஆசனி’ புயலாக வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதனால் தமிழகம், புதுவையின் சில பகுதிகளில் அடுத்த 4 நாள்களுக்கு காற்றுடன் மழைப் பொழியும். கடல் சீற்றத்துடன் காணப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில், புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் முதலாவது குறியீடு எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.

வெகு தொலைவில் புயல் உருவாகியுள்ளதால் மோசமான வானிலை நிலவும் என்றும் துறைமுகத்தில் பாதிப்பில்லை என எச்சரிக்கும் வகையில் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக, புதுச்சேரி துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இருப்பினும், ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோா் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலூரில்..: இதேபோல கடலூா் துறைமுகத்தில் புயல் தூர முன்னறிவிப்பு குறியீடாக முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஏற்றப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT