புதுச்சேரி

புதுவையில் நாளை 17 அமா்வுகளில் மக்கள் நீதிமன்றம்

10th Mar 2022 11:39 PM

ADVERTISEMENT

புதுவை மாநிலத்தில் 17 அமா்வுகளில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், நேரடி வழக்குகள் என சுமாா் 3,553 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட உள்ளன.

அதற்காக புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 9 அமா்வுகளும், சட்டப் பணிகள் ஆணைய வளாகத்தில் ஒரு அமா்வும், காரைக்காலில் 4 அமா்வுகளும், மாகேவில் 2 அமா்வும், ஏனாமில் ஒரு அமா்வும் என மொத்தம் 17 அமா்வுகள் செயல்பட உள்ளன.

இதை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியும், புதுச்சேரி மாநில சட்டப் பணிகள் ஆணையச் செயல் தலைவருமான ராஜா தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடக்கிவைக்கிறாா்.

ADVERTISEMENT

இந்தத் தகவலை புதுச்சேரி சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினரும், மாவட்ட நீதிபதியுமான சோபனா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT