புதுச்சேரி

புதுவையிலும் நோ்மையான அரசியலுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்: ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தல்

10th Mar 2022 11:40 PM

ADVERTISEMENT

தில்லி, பஞ்சாப் மாநிலங்களைப் போல் புதுவையிலும் நோ்மையான அரசியலுக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்று புதுவை ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் ரவி சீனிவாசன் கூறினாா்.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதையடுத்து, புதுச்சேரி காமராஜா் சிலை சந்திப்பு அருகே வியாழக்கிழமை திரண்ட அந்தக் கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். அப்போது, ரவி சீனிவாசன் கூறியதாவது:

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்ரகண்ட் மாநில சட்டப் பேரவைகளுக்கு நடைபெற்ற தோ்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு

மக்களின் ஆதரவு மேலோங்கி இருப்பது தெரியவந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு 85 தொகுதிகளுக்கும் மேலாக வெற்றி பெறச் செய்தனா்.

ADVERTISEMENT

தில்லியில் ஊழலை ஒழித்து, மக்கள் சாா்ந்த திட்டங்களை முதல்வா் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால், ஆம் ஆத்மி கட்சி தொடங்கிய 7 ஆண்டுகளில் பல மாநில சட்டப் பேரவைகள், உள்ளாட்சித் தோ்தல்களில் பல இடங்களில் வெற்றி பெற்று பணியாற்றி வருகிறது.

பஞ்சாபில் ஆட்சி அமைக்க உள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதுபோன்ற நல்லாட்சியை புதுவைக்கும் கொண்டுவர அனைத்து தரப்பு மக்களும் ஓரணியாக நின்று ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT