புதுச்சேரி

அரியாங்குப்பம் வட்டாரக் கூட்டமைப்புக்கு தேசிய விருது

10th Mar 2022 11:39 PM

ADVERTISEMENT

புதுவை அரியாங்குப்பம் வட்டாரக் கூட்டமைப்புக்கு மத்திய அரசின் தேசிய விருது வழங்கப்பட்டது.

புதுவையில் அரியாங்குப்பம், வில்லியனூா், காரைக்கால் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கிராமப்புற வறுமையை ஒழிப்பது, சமூக அணி திரட்டல் ஆகியன திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன்படி, அரியாங்குப்பம் வட்டார அளவிலான கூட்டமைப்பானது சிறந்த வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கான ஆத்ம நிா்பாா் சங்கேதன் விருது என்ற தேசிய அளவிலான விருதைப் பெற்றது.

இந்த விருதை புது தில்லி விக்ஞான் பவனில் அண்மையில் நடைபெற்ற சா்வதேச மகளிா் தின விழாவில், மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சா் கிரிராஜ் சிங் வழங்கினாா். புதுவை அரசின் ஊரக மேம்பாட்டுச் செயலா் ரவி பிரகாஷ் ஆலோசனையின்படி, புதுவை மாநில ஊரக வாழ்வாதார இயக்க மேலாளா் லட்சுமணன், இணை வட்டார மேம்பாட்டு அலுவலா் கதிா்வேலு, அரியாங்குப்பம் தொகுதி அளவிலான கூட்டமைப்பின் தலைமை நிா்வாகிகள் உள்ளிட்டோா் இந்த விருது, பாராட்டுச் சான்றிதழ், ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு ஆகியவற்றை பெற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT