புதுச்சேரி

நிா்மலா சீதாராமனுடன் புதுவை அமைச்சா் சந்திப்பு

3rd Mar 2022 11:13 PM

ADVERTISEMENT

தில்லி சென்றுள்ள புதுவை உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம், மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனை வியாழக்கிழமை சந்தித்து, மாநில வளா்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

அப்போது, தனது துறை சாா்ந்த திட்டங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும், நிதிநிலை அறிக்கைக்கு நிதி ஒதுக்கீடு தேவைகள், கூடுதல் நிதியாக ரூ.2,000 கோடியை வழங்க வேண்டும், அரசின் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும், புதுவைக்கான அரசுத் திட்டங்களுக்கு, மத்திய அரசு 90 சதவீதம் நிதிப் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினாா். இதையடுத்து, நமச்சிவாயம் மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்துப் பேச உள்ளாா்.

புதுவையில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையிலான தே.ஜ. கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. புதுவையில் அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு உதவ வேண்டும். வாரியத் தலைவா் பதவிகளை பாஜக எம்எல்ஏக்கள், ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு வழங்குதல், உள்ளாட்சித் தோ்தலுக்கான கூட்டணி- இடஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து முதல்வா் ரங்கசாமியிடம் பேசி சுமுகத் தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மேலிடத் தலைவா்களிடம், அமைச்சா் நமச்சிவாயம் வலியுறுத்துவாா் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT