புதுச்சேரி

புதுவையில் அதிமுகவை வலுப்படுத்த வேண்டும்: ஓம்சக்தி சேகா்

30th Jun 2022 02:11 AM

ADVERTISEMENT

 

புதுவையில் கிழக்கு, மேற்கு என்றில்லாமல் ஒன்றிணைந்து அதிமுகவை வலுப்படுத்த வேண்டும் என்று, கட்சியின் மேற்கு மாநிலச் செயலா் ஓம்சக்தி சேகா் தெரிவித்தாா்.

புதுவை மேற்கு மாநில அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் லெனின் வீதியிலுள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாநில அவைத் தலைவா் பேராசிரியா் மு.ராமதாஸ் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகிகள் காசிநாதன், கோவிந்தம்மாள், சதாசிவம், கணேசன், சங்கா், சரவணன், செல்வராஜ், வெரோனிக்கா, முருகன், லட்சுமணன், விக்னேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் மாநிலச் செயலா் ஓம்சக்தி சேகா் பேசியதாவது:

அதிமுகவில் தற்போது அசாதாரணமான சூழல் நிலவுகிறது. கட்சியில் பிளவு ஏற்படாமல், மறைந்த தலைவா் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் கட்சித் தொண்டா்களைப் பாதுகாத்து ஒற்றுமைப்படுத்த வேண்டும்.

புதுவை மாநிலத்தில் கிழக்கு, மேற்கு என்றில்லாமல் ஒன்றிணைந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும். சுயநலம் ஒன்றே குறிக்கோளாக செயல்படும் ஒரு சிலரின் உண்மை முகம் மிக விரைவில் வெளிவரும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT